செஞ்சி ரங்கநாதர் கோயிலில் கொள்ளை முயற்சி !
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலைப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிவது வழக்கம். இக்கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலைப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரிவது வழக்கம். இக்கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் உள்ளது.
இதனால் கோயிலுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலின் கருவறைக்கு அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. 5 கதவுகள் அமைத்து சென்றுள்ளனர் பழங்கால மன்னர்கள். இதனால் கருவறையில் பல கோடி மதிப்பிலான சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பாதுகாவலர்களும் உண்டு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு (ஜனவரி 5) வழக்கம் போன்று கோயில் பூசாசி பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவு நேரத்தில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 கதவுகளை தாண்டி உள்ளே சென்றுள்ளனர். அப்போது 3வது கதவினை உடைக்க முற்பட்டபோது சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பாதுகாவலர்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இரவு பணியில் இருந்த காவலர்கள் சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்கம் உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் விழுப்புரத்தில் இருந்து தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட எஸ்.பி.யும் நேரில் சென்று கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் உள்ள சிலைகளை திருட வந்தனரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: Maalaimalar