தமிழக சட்டசபை தேர்தல் நடத்த ரூ.102 கோடி நிதி ஒதுக்கீடு! சட்டசபையில் துணை முதலமைச்சர் தகவல்!

tamilnadu election

Update: 2021-02-27 11:06 GMT


தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தமிழக சட்டசபை தேர்தல் நடத்துவதற்காக ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது என்றார்.


இதனை தொடர்ந்து அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனை பட்டியலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுப் பேசினார். தற்போது நடக்கும் சட்டசபை கூட்டம் கடைசி என்பதால் சபாநாயகர் தனபால் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News