சமூக நலத்திற்கு ரூ.1,953 கோடி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி நிதி ஒதுக்கீடு.!
சமூக நலத்திற்கு ரூ.1,953 கோடி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.1,932 கோடி நிதி ஒதுக்கீடு.!
தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட்டை காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதில் பல்வேறு வகையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதில் சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.
நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பேசினார்.