திருவையாறு: நீதிமன்ற உத்தரவால் ரூ.2 கோடி கோயில் நிலம் மீட்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-18 03:09 GMT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவையாறு அடுத்த கண்டியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் பத்து சென்ட் நிலம் கண்டியூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். அதன் பின்னர் கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணத்தை செலுத்தாமலேயே இருந்துள்ளார். இதனால் கோயில் நிர்வாகம் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் நிலத்தை மீட்டுதருமாறு வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து வருவாய் நீதிமன்ற அமலாக்க தனி வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில் ரூ.2 கோடி நிலத்தை மீட்டு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பொதுமக்களும், பக்தர்களும் வரவேற்றுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News