குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு !

தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-13 07:58 GMT

தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முதன் முறையின் இன்று 2021, 22ம் ஆண்டிற்கான பொதுபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:

மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி.

நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்.

பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு.

Source: Topnews

Image Courtesy: Toptamilnews

https://www.toptamilnews.com/tamilnadu-budget-session-2021-announcement/




Tags:    

Similar News