புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.600 கோடிக்கு இடுபொருள் நிவாரணம்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.600 கோடிக்கு இடுபொருள் நிவாரணம்.. முதலமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-01-02 17:46 GMT

நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இடு பொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கடந்த வருடம் ஏற்பட்ட நிவர், புரெவி புயலால் விவசாய நிலங்கள் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த ஆண்டு சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி போனதால் விவசாயிகள் மிகவும் கவலையில் இருந்தனர். உரிய நிவாரணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், புயலால் பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வருகின்ற 7ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், மானாவாரி நெற் பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மானாவாரி நெற்பயிருக்கான இடு பொருள் நிவாரண தொகையை 13,500 ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ஏனைய மானாவாரி பயிர்களுக்கான நிவாரணத் தொகை ஹெக்டருக்கு 7410 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு. அதே போன்று பல்லாண்டு கால பயிர்களுக்கான நிவாரண தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News