ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கட்டுப்பாடு - தமிழகத்தின் மேல் குவியும் ஆர்.எஸ்.எஸ் கவனம்

50க்கும் மேற்பட்ட கேஸ்கள் போட்டு 44 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி பெற்று இருக்கிறது.

Update: 2022-11-06 08:19 GMT

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் இரண்டாம் தேதியில் 50 இடங்களில் அனுமதி உடன் கூடிய அணிவகுப்பு நடத்த அனுமதிக்குமாறு RSS நிர்வாகிகள் மனு கொடுத்து இருந்தார்கள். ஆனால் போலீசார் நிராகரித்ததால் உயர்நீதிமன்றத்தில் RSS நிர்வாகிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுபவிப்பை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை, கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து RSS நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 6ஆம் தேதி அனுபவிப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட்டனர். இதனுடைய பெயரால் தமிழக அரசு உளவு அறிக்கையில் ரிப்போர்ட்டை காரணம் காட்டி, மூன்று இடங்களில் மட்டும் தான் அணிவகுப்பு நடத்தலாம். மற்ற இடங்களில் உள்பொது கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவை இட்டிருக்கிறது.


இதனை ஏற்க முடியாது என்று கூறி RSS மறுபடியும் நீதிமன்றத்தை அணுகியது. ஒரு வழியாக 50க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்து தற்பொழுது 44 இடங்களில் குறிப்பாக கோவை உட்பட ஆறு இடங்களை தவிர 44 இடங்களில் RSS அணிவகுப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இந்த ஊர்வலமானது இன்று தமிழக முழுவதும் RSS சார்பில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News