மத்திய அரசின் பாஸ்டேக் முறைக்கு கோடி புண்ணியம் : தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வந்தது டோல் கேட் கட்டண மோசடி..!

2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் வாகனங்களிடம் இருந்து 3.14 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Update: 2021-10-04 13:58 GMT

பாஸ்டேக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், இதுவரை நடைபெற்று வந்த சுங்கக் கட்டண மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு, தமிழகத்தில் சுங்கக் கட்டண வசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை பல கோடி சுங்கக் கட்டணம் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் பரனூரில் அமைந்துள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் கூடுதலாக 7.39 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கக் கட்டணத்தை செலுத்தியுள்ளன. அந்த சுங்கச்சாவடியில் இந்த ஆண்டு பிப்ரவரி ௧௫ ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணங்கள் முழுக்க முழுக்க பாஸ்டேக் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. அப்படிப்பார்த்தால் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை வைத்து கணக்கிட்டால், எவ்வளவு மோசடி நடந்திருக்கும் என்பதை அறியலாம்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 5.08 லட்சம் வாகனங்கள் பரனூர் சங்கச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ.3.14 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பாஸ்டேன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 2021 ஜூலையில் மட்டும் 12.47 லட்சம் வாகனங்கள் மூலம் ரூ.8.83 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது.


2019 ஜூலையில் வெறும் 20 சதவீத சுங்கக் கட்டணம் தான் பாஸ்டேக் முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது. மற்றவை ரொக்கமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலையில் 91.6 சதவீதக் கட்டணம் பாஸ்டேக் முறையிலும், மற்றவை ரொக்கமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு வேறு எந்த அறிவியல்பூர்வ காரணங்களும் இல்லை என்றும், முறைகேடு நடந்திருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த ஒரு சுங்கச் சாவடியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதையே, கடந்த 10 - 15 ஆண்டுகளில் அனைத்துச் சுங்கக் கட்டணங்களையும் கணக்கிட்டால், முறைகேடு செய்யப்பட்ட பணம் மட்டும் எவ்வளவு தேறும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.



Tags:    

Similar News