கொரோனா அதிகரிப்பால் போக்குவரத்து ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு.!

உதவி மின் ஆய்வாளர், உதவி இன்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.;

Update: 2021-05-30 03:58 GMT
கொரோனா அதிகரிப்பால் போக்குவரத்து ஆய்வாளர் நேர்முகத்தேர்வு தள்ளிவைப்பு.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அடுத்த மாதமர் ஜூன் 8ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2 பணிக்கான நேர்முகத்தேர்வு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது.

மேலும், உதவி மின் ஆய்வாளர், உதவி இன்ஜினீயர், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News