மண் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு டூ லண்டன் பைக் பயணம் தொடங்கிய சத்குரு!

Update: 2022-03-05 13:50 GMT
மண் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு டூ லண்டன் பைக் பயணம் தொடங்கிய சத்குரு!

உலகளவில் மண் வள பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு சத்குரு, தனியாகவே சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை ஈஷா மையமான ஆதியோகி சிலை முன்பு ஆயிரக்கணக்கானோர்கள் திரண்டு சத்குருவை வழியனுப்பி வைத்தனர். இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் உற்சாகமாக கைத்தட்டி வழியனுப்பினர்.

இது தொடர்பாக ஈஷா மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மார்ச் 21ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கும் அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக இந்தியா வந்து தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இதில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டிலும் கலந்து கொண்டு சத்குரு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News