சேலம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உயர்வு.. புதியவர்களுக்கு இடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸில் சிகிச்சை.!

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளால் நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவனையில், படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியுற்றும் வருகின்றனர்.

Update: 2021-05-04 12:05 GMT

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளால் நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவனையில், படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியுற்றும் வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக வீசத்தொடங்கியுள்ளது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகளால் இருக்கைகள் நிரம்பி வழிகிறது. பல்வேறு இடங்களில் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.




 


இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால், புதியவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Similar News