சேலத்தில் உருவான ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.!

சேலத்தில் உருவான ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.!

Update: 2021-02-22 10:58 GMT

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. இந்த பண்ணை வளாகத்தில் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட கால்நடை மருத்துவமனை மற்றும், கறவை மாட்டுப்பண்ணை உள்ளிட்டவை செயல்படும்.

இந்நிலையில், தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இந்த பண்ணையில் பல்வேறு வகையான கால்நடைகள் வளர்க்கப்படும், மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிகளவு இங்கு உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

இப்பண்ணையில் நவீனமயமாக்கப்பட்ட லேப் வசதிகள், கால்நடைகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இப்பண்ணை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News