சேலம்: கொரோனா விதிமுறை மீறி செயல்பட்ட நீட் பயிற்சி மையத்துக்கு சில்.!
சேலம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து பயிற்சி நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் பல்வேறு பயிற்சி மையங்கள் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து பயிற்சி நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாணவர்கள் யாருமே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் அமர்ந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களை அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு செல்ல அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர் நீட் பயிற்சி மையத்துக்கு ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டதுடன், சீல் வைத்து உத்தரவிட்டனர்.