சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்.!
சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்.!;
சித்த வைத்தியத்தில் மிகவும் பிரபலமானவரான சேலம் சிவராஜ் சிவகுமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலத்தை தலைமையிடமாக கொண்டு சிவராஜ் சித்த வைத்தியர் சாலை சுமார் 7 தலைமுறைகளாக இயங்கி வருகிறது. இந்த சித்த மருத்துவத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் கிடைக்கும். இந்த வைத்திய சாலை சுமார் 206 வருடங்களுக்கு மேலாக சித்த வைத்தியத்தில் சாதனை புரிந்து வருகிறது.
அதே போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சிவராஜ் சிவகுமார் வைத்தியம் பார்ப்பார். அது மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் சித்த மருத்துவம் பற்றி உரையாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் பூர்வீக இடமான சிவதாபுரத்தில் உள்ள அகஸ்தியர் மாளிகையில் இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது. சிவராஜ் சிவகுமார் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.