விளையாட்டு மைதானமா... இல்ல தி.மு.கவின் விளம்பர அரசியல் செய்யும் இடமா.. சர்ச்சை மேல் சர்ச்சை!
விளையாட்டு மைதானத்தில் விதிகளை மீறியதாக திமுக தரப்பில் சர்ச்சை எழுந்து இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளும் மற்றும் கழக கண்மணிகளும் பல்வேறு செயல்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை திமுக விளையாட்டு மேம்பாட்டு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தற்போது அகில இந்திய அளவிலான மகளிர் கூடல் பந்து போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இந்த விளையாட்டுப் போட்டி மைதானத்துக்குள்தான், தி.மு.க. சார்பில் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதோடு, கட்சி கொடியும் கட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக பெரும் சர்ச்சை அங்கு எழுந்து இருக்கிறது.
குறிப்பாக உள் விளையாட்டு அரங்கிலும் விளம்பர பதவிகள் வைக்கப்பட்டிருந்ததால் விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு விளையாட்டு வீரர்கள் கூறுகையில், "அரசியல் கட்சிகள் சார்பில் விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை நடத்துவது வழக்கம்தான். ஆனால் போட்டிகளின் போது கட்சி கூட்டங்களின புது வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் உள்ள அரங்கத்திற்குள் வைக்கப்படுவது கிடையாது. தற்போது தி.மு.க. இப்படியொரு புதிய கலாசாரத்தை புகுத்துகிறது. இதைப் பார்த்து பிற கட்சியினரும் பேனர் வைக்கத் தொடங்கினால் எங்களுக்குத்தான் தொல்லை.
ஆகவே, இதுபோன்ற செயல்களை ஆரம்பத்திலேயே தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். மேலும் இது தொடர்பாக சேலம் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் சிவரஞ்சன் இதைப்பற்றி கூறும் போது, "திமுக சார்பில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டது உண்மைதான். எங்களிடம் அனுமதி கேட்கும் பொழுது கட்சிக்கொடி வைக்கவோ அல்லது பேனர்கள் கட்டவோ அனுமதி கிடையாது என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் அனுமதியும் மீறி கட்டப்பட்டு இருப்பது விதியை மீறிய செயல்தான்" என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Mediyaan News