சமத்துவபுர வீடுகள் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்: பயனாளிகள் வேதனை!
சமத்துவபுர வீடுகள் சீரமைப்பு பணிகளில் தற்போது ஊழல் நடந்துள்ளதாக பயனாளிகள் வேதனையை தெரிவித்துள்ளார்கள்.
ராசிபுரம் அருகே 1999ஆம் ஆண்டு கருணாநிதியால் பயனாளர்களுக்கு வழங்கப்பட்ட நூறு வீடுகள் சீரமைப்பு பணி தேவைப்படும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக கருணாநிதியின் பிறந்தநாள் அன்று தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் சீரமைப்பு பணிகளுக்கு ஒரு வீட்டுக்கு தலா 50 ஆயிரத்தை ஒதுக்கி உள்ளார். இந்த சீரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறையில் தான் தற்போது முறைகேடு நடந்துள்ளதாகவும் ஊழல் நடந்துள்ளதாக அங்குள்ள பயனாளிகள் கூறியுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டு நூறு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவை தற்போது சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் இவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் தற்போது ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக நூறு வீடுகளில் 59 வீடுகளுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசுதல் பணி மேற் கொள்ளவும்.
சுமார் 40 வீடுகளுக்கு சிறுசிறு பழுதுகளை சரி செய்து பிற பணிகளை மேற்கொள்ளவும் 20 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீட்டிற்கு 50,000 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கப்பட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதாது எனவும் பராமரிப்பு செலவுகள் மற்றும் மேற்கில் அவர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தொகையை உயர்த்தித் தருமாறு பயனாளிகள் கூறியுள்ளார்கள் மேலும் இந்த பணியை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் இந்த பணியில் மெத்தனம் காட்டி வருவதாகவும் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டிய பணியை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து உள்ளார்கள் என்றும் பயனாளிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Input & image courtesy: News 18