சாம்பிராணி புகை போட்டதற்காக கொலை வெறித் தாக்குதல் நடத்திய 'தனியார் அமைப்பை' சேர்ந்தவர்.!
சாம்பிராணி புகை போட்டதற்காக கொலை வெறித் தாக்குதல் நடத்திய 'தனியார் அமைப்பை' சேர்ந்தவர்.!
தென்காசியில் "என் கடையில் ஏன் சாம்பிராணி போடுகிறாய்" என்று கேட்டு இந்து வியாபாரியை மதம் மாறிய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் காட்சி இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவரைத் தாக்கிய முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்து வியாபாரிகள் மதரீதியாக தொடர்ந்து தாக்கப்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் சாம்பிராணி போடும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் சந்திரமோகன். இவர் அப்பகுதியில் உள்ள கடைகளில் சாம்பிராணி போட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியில் கோழிக் கடை நடத்தி வரும் 27 வயது மதிப்புடைய தங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்டு முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறிய அகமது ரியாஸ் என்பவர் சந்திரமோகனை சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து காயமடைந்த சந்திரமோகன் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் அகமது ரியாஸை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் "எனது கடையில் நீ என் சாம்பிராணி போடுகிறாய்" என்று கேட்டு சந்திரமோகனைத் தாக்கியதாக தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து இந்து வணிகர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி தென்காசியில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது மூன்று தினங்களுக்கு முன்பு சாம்பிராணி போடும் சந்திர மோகன் என்பவர் முஸ்லிமால் தாக்கப் பட்டார் என்றும் நேற்று சலவைத் தொழில் செய்து வரும் பட்டு என்பவர் ஒரு முஸ்லிமால் தாக்கப்பட்டுள்ளார் என்றும் இவ்வாறு தொடர்ந்து இந்து வியாபாரிகள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வணிகர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியும் தாக்குதல் நடத்தியவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.