மணல் கடத்தல் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மணல் கடத்தல் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

Update: 2021-02-24 18:38 GMT

தமிழகத்தில் மணல் கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இதனை தடுப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத மணல் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதனடிப்படையில் தலைமைச் செயலாளர் 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இனிமேல் ஆவது மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Similar News