ஜெய்பீம் படத்திற்கு எதிராக பேசினாரா சந்தானம்: ட்விட்டரில் பெருகும் ஆதரவு!

ரூடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் படக்குழுவினர் மீது காவல் நிலையங்களில் புகார்களும் குவியத் தொடங்கியுள்ளது.

Update: 2021-11-17 11:17 GMT

ரூடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் மற்றும் படக்குழுவினர் மீது காவல் நிலையங்களில் புகார்களும் குவியத் தொடங்கியுள்ளது.

இதனிடையே நேற்று நடிகர் சந்தானம் சபாபதி படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதத்தை உயர்த்தி காட்டுங்கள். உங்களுடைய கருத்தை உயர்த்தி காட்டுங்கள். அது பிரச்னையில்லை. ஆனால் அடுத்த சமூகத்தை தாழ்த்தி காட்டாதீர்கள். 'ஜெய்பீம்' படத்துக்காக அல்ல. பொதுவாகவே இந்துமதம் நல்லதுஎன்றால் அதனை உயர்த்தி பேசலாம். அதே சமயம் மற்ற மதங்களையும் தாழ்த்தி பேசாதீர்கள் என்றார். 


மேலும், இரண்டு மணி நேரம் அனைவரும் சாதி, மதத்தை கடந்து ஒரு படத்தை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மற்றும் விரு விருந்தாக அந்தப்படம் இருக்க வேண்டும். அதனால் இங்கே தேவையில்லாத விஷயம் என்றார். ஒரு படத்தை பார்க்காமல் விமர்சனம் செய்வது தவறு என்றார். இந்நிலையில், நடிகர் சந்தானம் ஜெய்பீம் படம் பற்றிய கருத்தை வெளியிட்ட நிலையில், இன்று ட்விட்டரில் ஆதரவு பெருகி வருகிறது. ஐ ஸ்டேன்ட் வித் சந்தானம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Source: Twiter

Image Courtesy: Customer Care 

Tags:    

Similar News