சாத்தூர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
சாத்தூர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
சாத்தூர் அடுத்துள்ள அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பட்டாசு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் இறந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.