சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து.. முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு.!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து.. முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு.!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மாரியம்மாள் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் கடந்த வாரம் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஏ.கே.கோயல் இந்த விபத்து தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையிலான 8 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒரு வாரத்திற்குள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஒரு மாத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.