அடிக்கடி கசியும் வினாத்தாள்: அலட்சியமாக செயல்படுகிறதா தமிழக பள்ளிக்கல்வித்துறை?

Update: 2022-04-04 07:01 GMT

தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியானது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்கள் திடீரென்று கசிந்தது. பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வினாத்தாள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது. இது திமுக அரசின் அலட்சியப்போக்கு என்று கல்வியாளர்கள் கருத்து கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நன்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News