1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகள் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2021-10-30 11:55 GMT

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி பள்ளிக்கு வருகின்ற 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளான கதை, பாடல், விளையாட்டு, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்டவைகளை செயல்முறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் 15 நாட்கள் கழித்து 40 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் கற்றல் திறனை எட்டும் வரை புத்தாக்கப்பயிற்சி தொடர வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இவரது அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai

Tags:    

Similar News