பள்ளி வாடகை பாக்கி என்பது பொய்.. லதா ரஜினிகாந்த்.!

பள்ளி வாடகை பாக்கி என்பது பொய்.. லதா ரஜினிகாந்த்.!

Update: 2020-12-16 14:30 GMT

ஆஷ்ரம் பள்ளி விவகாரத்தில் வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை என்றும் இது பொய் எனவும் லதா ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், லதா ரஜினிகாந்த், ஆஷ்ரம் பள்ளி வளாகத்திற்கான வாடகை உரிய முறையில் செலுத்தப்பட்டு வருகிறது வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை.

கொரோனா காரணமாக ஏப்ரல் 2020ம் ஆண்டு காலக்கெடுவுக்குள் வேறு இடத்திற்கு பள்ளியை எங்களால் மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என கூறியுள்ளார். முன்னதாக பள்ளியை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஷ்ரம் பள்ளியை வாடகை கட்டடத்தில் நடத்தி வருகிறார்.

இதன் உரிமையாளர் வெங்கடேஷ் வரலு என்பவருக்கு லதா ரஜினிகாந்த் சரிவர வாடகை பணம் கொடுக்கவில்லை என்ற புகார் அடிக்கடி வெளிவருவதை பத்திரிகையில் பார்த்து வருகிறோம். இதனால், கட்டட உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் லதா ரஜினிகாந்த் உரிய முறையில் வாடகை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனை லதா ரஜினிகாந்த் பின்பற்றாத நிலையில் கடந்த ஏப்ரல் 2020 இல் இடத்தை காலி செய்ய உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கொரோனா காரணமாக உரிய நேரத்தில் பள்ளி வளாகத்தை காலி செய்ய முடியவில்லை என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

லதா ரஜினியின் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம் அவகாசம் தந்துள்ளது. அத்துடன் ஆஷ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021 22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதித்தும், ஏப்ரல் 30 க்கு பின் காலி செய்யாவிடில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குள்ளாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
 

Similar News