பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாக இருக்க மது கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சாதிக்க வேண்டுமானால் தமிழ்நாட்டின் அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும்.

Update: 2022-09-15 08:15 GMT

பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மறு மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இல்லாவிட்டில் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்களின் நடுநிலை அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.


மேலும் தமிழ்நாட்டிலே 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்பதும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து தொடர்பாக பொதுநல வழக்கின் விசாரணையின் போது தான் நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளார்கள். பள்ளி மாணவர்கள் சீருடை உடன் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று நீதிபதிகள் கவலை கலந்த கோபத்துடன் வினா எழுப்புகின்றார்கள்.


பள்ளிகளுக்கு அருகிலும், பள்ளிகளுக்கு செல்லும் சாலைகளிலும் மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மது விற்கக் கூடாது என்று ஆணையிடுவதன் மூலமாக மட்டுமே மாணவர்களின் மதுப்பிடியில் இருந்து மீட்க முடியும். எனவே வருங்கால தலைமுறை தலைமுறையினரின் நலன்களை கருத்தில் கொண்ட தமிழ்நாட்டில் அனைத்து மது கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும். இதன் மூலமாக மாணவ செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கமும், சாதிக்கவும் தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டுகிறேன் இவ்வாறு அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Input & Image courtesy:dailythanthi news

Tags:    

Similar News