தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு! உற்சாகமுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை!

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு! உற்சாகமுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை!

Update: 2021-01-19 13:23 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு 2019 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக தேர்வுகள் மற்றும் பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. அதில் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இன்று முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 10 மாதத்திற்கும் மேலாக வீட்டிலே இருந்த மாணவர்கள் இன்று ஆர்வமுடன் பள்ளிக்கு வருவதை காண முடிந்தது. அதே போன்று ஆசிரியர்களும் பள்ளிக்கு உற்சாகமுடன் வந்திருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வுகள் குறித்து தெரிவிக்கப்படும். இதன் பின்னரே வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பள்ளி வளாகம், மற்றும் வகுப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

Similar News