கனமழையால் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.;

Update: 2021-11-03 02:33 GMT
கனமழையால் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமின்ற சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News