முழுமையாக பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் அரசுக்கு கோரிக்கை.!
முழுமையாக பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் அரசுக்கு கோரிக்கை.!
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பின்னர் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்து வகுப்புகளும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருப்த்தூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இளங்கோவன் பேசியதாவது: கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கடந்த 10 மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை பகுதிநேர ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.
எனவே தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.