1 முதல் 9ம் வகுப்புகளுக்கு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் தகவல்.!

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்.. அமைச்சர் தகவல்.!

Update: 2021-01-13 10:29 GMT

கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஆய்வு செய்த பின்னர் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 19ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படுடும் என கூறப்பட்டிருந்தது.
அதேபோன்று பள்ளிக்கு வரும் மாணவர்ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, முதற்கட்டமாக திறக்கப்படும் 10,12 ஆம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. விருப்பமுள்ள 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என கூறினார்.
 

Similar News