பழங்குடியினர் சாதி சான்றிதழ் விசாரணை மண்டலம் மாற்றி அமைப்பு: அரசு அறிவிப்பு!
பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் விசாரணை மண்டலம் மாற்றி அமைப்பு.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் இது பற்றி கூறுகையில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 36 வகையான உட்பிரிவுகளை சார்ந்த ஏழு லட்சத்தை 94 ஆயிரத்து 697 பழங்குடி மக்கள் வசித்து வருகின்றார்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில மக்கள் தொகையில் 1.10 சதவீதமாகும். பழங்குடி மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்று எண்ணத்தில் சென்னை சேலம் மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் மெய் தன்மை விசாரணை பிரிவின் பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
விசாரணையை துரிதப்படுத்துவதற்காக அதில் திருத்தம் செய்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்திலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன. அதன் தலைமையிடம் சென்னை ஆகும். சேலம் மண்டலத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி மாவட்டங்கள் அமைந்திருக்கின்றன. அதன் தலைமையிடம் சேலம்.
மதுரை மண்டலத்திலும் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, திருவாயூர், திருவாரூர், தென்காசி, திருச்சி தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வேலூர் என்று புதிய மண்டலங்களாக உருவாக்கப்பட்ட வேலூரை தலைமை இடமாகக் கொண்டு வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. எனவே பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் விசாரணை மண்டலம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.