தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க பெட்ரோல் குண்டு வீசிய SDPI நிர்வாகிகள் கைது!

தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க பெட்ரோல் குண்டு வீசிய SDPI நிர்வாகிகள் கைது!

Update: 2022-09-26 02:44 GMT

கோவையில் பாஜக அலுவலகம் உட்பட 6 வெவ்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க, 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர், 500க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். 

கடந்த 23ம் தேதி குனியமுத்துாரில் இந்து முன்னணி பொறுப்பாளர் ரகு வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மீது எரிபொருள் ஊற்றி, அதில் தீ பற்ற வைத்த சம்பவம் நடந்தது.அதே நாளில், குனியமுத்துாரில் பா.ஜ., உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டில், கெரசின் குண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையே பிளவு ஏற்படுத்தும் செயல், தீ வைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டது.

தனித்தனியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நுண்ணறிவு சேகரித்தல், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தல், மற்ற வகையில் புலன் விசாரணை செய்தல் ஆகியவற்றின் முடிவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் சம்பவம் தொடர்பாக, மதுக்கரை அறிவொளி நகரில் வசிக்கும் ஜேசுராஜ், 34, என்பவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் சம்பவம் தொடர்பாக, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரை சேர்ந்த இலியாஸ், 34, என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த இருவரும், எஸ்.டி.பி.ஐ., கட்சியில் பொறுப்பாளர்களாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை போல சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 

Input from: Dinamalar 

Similar News