ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பேருந்து பறிமுதல்: இரவு முழுவதும் சாலையில் தவித்த குஜராத் பெண்கள்!

குஜராத்தில் இருந்து சுமார் 41 பயணிகள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த பேருந்து திருச்சி, திண்டுக்கல் சாலை பிராட்டியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பேருந்தை சோதனை செய்துள்ளனர். அப்போது பேருந்தில் சுற்றுலா வருவதற்கான ஆவணம் இல்லாமல் இருந்துள்ளது.

Update: 2022-01-04 12:57 GMT

இதனை தொடர்ந்து அபராதம் செலுத்த பேருந்து ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவ்வளவு தொகை இல்லாததால் சுற்றுலா பயணிகளால் அபராதத்தொகையை கட்ட முடியவில்லை. இதனால் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்து அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் வேறு வழியின்றி இரவு முழுவதும் பெண்கள் மற்றும் ஆண்கள் வாசலிலேயே காத்திருந்தனர். அதுவும் பெண்கள் கழிப்பறை வசதியின்றி சாலையில் பரிதாபத்துடன் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் ஆன்லைன் மூலமாக சுற்றுலா பயணிகள் அபராதத்தொகையை செலுத்தியுள்ளனர். இதன் பின்னரே பேருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் ராமேஸ்வரத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News