"இது அரசாணையை மீறிய செயல்" சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு மனுவை அனுப்பி அதிரடி காட்டும் இந்து முன்னணி !
இந்து முன்னணி ராமேஸ்வர மாவட்ட பொது செயலாளர் கே.ராமமூர்த்தி அவர்கள் தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் தான் உள்ளன. அதில் ஒரு நூதன கட்டுப்பாடு தான் புனித இந்து கோயில்களில் வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பக்த்தர்களை அனுமதிக்காமல் இருப்பது.
பொதுவாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தான் பக்தர்கள் கோயில்களுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் . ஆனால் இந்த தி.மு.க அரசு இந்த கட்டுப்பாடுகளை இன்னும் தளர்த்தாமல் அமலில் வைத்துள்ளது. இது இந்து மக்களிடம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மது கடைகளில் கூடும் கூட்டங்களை இந்த அரசு கவனிக்காது, கோவில்களில் பக்தர்கள் கூடுவதை மட்டும் இந்த அரசு கவனிக்கும் போலும்....
இந் நிலையில் 25.19 2021 சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நூற்றுக்கணக்கான திமுக காரர்களுடன் ராமநாதசுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார். பெருந்தொற்று காரணமாக தமிழக கோயில்கள் சனி கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும் காலத்தில் இவர் நூற்றுக்கணக்கான கட்சிக்காரர்கள் உடன் தரிசனம் செய்ததை எதிர்த்து இந்து முன்னணி ராமேஸ்வர மாவட்ட பொது செயலாளர் கே.ராமமூர்த்தி அவர்கள் தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது : ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நேற்றையதினம் ( 25.9.2021 ) ஆய்வுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக கோயில்கள் வெள்ளி,சனி மாற்று ஞாயிறு ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் காலத்தில். இவர் சனிக்கிழமையில் தமிழக அரசின் உத்தரவை மீறி ஆய்வு என்ற பெயரில் நூற்றுக்கணக்கான திமுக காரர்களுடன் அருள்மிகு ராமநாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்துள்ளார். தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய அமைச்சரே இப்படி தமிழக உத்தரவை மீறி இந்த ஆய்வினை ஆலயம் திறக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் வைத்திருந்தால் ஆய்வை பக்தர்களின் கருத்துக்களையும் கேட்டு சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால் ஆலயம் மூடப்பட்டு இருக்கும் சமயத்தில் அரசு உத்தரவையும் மீறி நூற்றுக்கணக்கான பேருடன் ஆய்வு செய்திருப்பது தமிழக அரசு ஆணையை மீறிய செயலாகும். இவ்வாறு தமிழக அரசாணையை மீறி செயல்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.