நேற்று செம்பரம்பாக்கம்.. இன்று கடலூர்.. நிவர் புயலை துரித நிலையில் எதிர்கொள்ளும் முதலமைச்சர்..!

நேற்று செம்பரம்பாக்கம்.. இன்று கடலூர்.. நிவர் புயலை துரித நிலையில் எதிர்கொள்ளும் முதலமைச்சர்..!

Update: 2020-11-26 10:02 GMT

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் செல்கிறார். ‘நிவர்’ புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி, மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழுந்து கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.


மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று பிற்பகல் 2.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்கிறார். 


நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு கட்ட மீட்பு பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கினார். மேலும், செம்பரபாக்கம் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டார். எந்த விதத்திலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய கூடாது என்பதற்காக முதலமைச்சர் இரவு, பகலாக உழைத்து வருவதை அனைவரும் அறிந்ததே, மேலும், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Similar News