செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடைபெறாது: உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே செமஸ்டர் தேர்வினை நேரடியாக கல்லூரியில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் கோஷம் எழுப்பும்போதும், ஆன்லைன் மூலமாக கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வினை நேரடியாக நடத்தக் கூடாது எனவும், ஆன்லைனிலேயே தேர்வையும் நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது உயர்கல்வித்துறைக்கு ஒரு சங்கடமான நிகழ்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனிமேல் மாணவர்கள் தேவையின்றி போராட்டத்தை நடத்துவதை விட்டு கல்லூரிகளில் தேர்வுகளை எழுத வேண்டும் என்று பேராசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi