அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த 'துரோகி பட்டம்': நச்சுனு பதிலை கொடுத்து ஆஃப் செய்த EPS?
எடப்பாடியை சீண்டிய செந்தில் பாலாஜிக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகம் செய்த முதலமைச்சர் என விமர்சித்து இருக்கிறார். இந்த ஒரு விமர்சனத்திற்கு தன்னுடைய பதிலடியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மிகவும் கச்சிதமாக அவரைப்பற்றி தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த செந்தில் பாலாஜி பேசிய நிலையில் அதற்கு பதில் தரும் விதமாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவரைப் பற்றி கூறியிருக்கிறார்.
போகிற கட்சிக்கு எல்லாம் துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி என்றும் l, அவர் துரோகத்தை பற்றி பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி வெறும் எச்சரிக்கையாக கூறுகிறார். தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சியில் தலைவரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், "நம்பிக்கை துரோகத்தால் முதலமைச்சர் ஆனவர்களால் தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அறிக்கை வாசித்து முடிக்கும் முன்பே வெளியில் வந்து விமர்சித்து இருக்கிறார்கள் என்று அவர் கடுமையாக சாடி இருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமி துரோகி என வர்ணித்து இருக்கிறார். முதலில் துரோகிக்கு அடையாளம் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி எத்தனை கட்சிக்கு சென்று உள்ளார். ஒரு கட்சியா, இரண்டு கட்சிக்கா அவர் வந்து இருக்கிறார், போகின்ற கட்சிக்கு எல்லாமே அவர் துரோகம் தான் இழைத்தார். துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது. நான் 1974 அ.தி.மு.கவில் சேர்ந்தேன். இன்று வரை அ.தி.மு.கவில் தான் இருந்து வருகிறேன். ஆனால் செந்தில் பாலாஜி எத்தனை கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு சென்றிருக்கிறார் என சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
Input & Image courtesy: Oneindia News