பெரம்பலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்! நடவடிக்கை எடுக்குமா அரசு!
பெரம்பலூர் நகரில் பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து கழிவுநீர் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் நோய்த்தொற்று பரவும் என்ற அச்சத்திலேயே நாட்களை கழித்து வருகின்றனர்.

பெரம்பலூர் 7வது வார்டில் ஏஇஓ அலுவலகம் செல்கின்ற பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து கழிவுநீர் ஆறாக சாலைகளில் ஓடுகிறது. அது மட்டுமின்றி அருகாமையில் உள்ள வீடுகளை சுற்றியும் கழிவுநீர் குளம் போன்று தேங்கியுள்ளது.
வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை உண்டாக்குவதற்குமுன்னர் கழிவுநீர் அடைப்பு சரிசெய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai