பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ரோபோ! திருவாரூர் நகராட்சியில் தொடக்கம்!

பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ரோபோ! திருவாரூர் நகராட்சியில் தொடக்கம்!

Update: 2021-01-21 11:58 GMT

திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ரோபோ திட்டத்தை ஓ.என்.ஜி.சி, ஹேண்ட் இனு ஹேண்ட் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அமைப்பு திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தையும் வங்கி நிதியுதவியுடன் தொடங்கியுள்ளது. ஓ.என்.ஜி. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் நிலையை மாற்றும் விதமாக ஆழ்துளை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யக்கூடிய ரோபோ இயந்திரத்தை  திருவாரூர் நகராட்சிக்கு ரூபாய் 45 லட்சத்தில் வழங்கப்பட்டது.

இதனை ஓ.என்.ஜி.சி. அதிகாரி அமுதசேகரன் நாச்சியப்பன், ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் முன்னிலையில் திருவாரூர் நகராட்சி ஆணையர் சண்முகத்திடம் வழங்கினார்கள்.

இதனையடுத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.

Similar News