SG சூர்யாவின் ஜாமின் நிபந்தனை மனு தள்ளுபடியா.. நீதிமன்றம் உத்தரவு என்ன..

Update: 2023-07-05 07:30 GMT

கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது, இதற்கு என்ன பதில் கூற போகிறீர்கள்? என்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் MP வெங்கடேசன் அவரை கேள்வி கேட்டு டுவிட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா. இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, பாஜக மாநில செயலாளர் SG சூர்யா மீது மதுரை சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டார்.


இதனையடுத்து ஜாமின் கோரி எஸ்.ஜி. சூர்யா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது, பின்பு ஜாமினின் பெயரில் தற்பொழுது வெளிவந்து இருக்கிறார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டும் படி நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக மதுரையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி எஸ்.ஜி சூர்யா தாக்கல் செய்த மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஏற்கனவே நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனையை தளர்த்த கோரி தொடரப்பட்ட வழக்கில் SG சூர்யாவின் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News