SG சூர்யாவுக்கு சம்மன் அனுப்பிய காவல் துறை... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில செயலாளராக இருக்கும் எஸ்.ஜி சூர்யா அவர்கள் சிதம்பர நகர காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் ஒன்று அனுப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுதான் சம்மன் அனுப்ப காரணம்.
சமீபத்தில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தூய்மை பணியாளர் ஒருவரின் இறப்பிற்கு எந்த வகையில் பதில் கூற போகிறீர்கள்? என்பது தொடர்பான கருத்து ஒன்றை பதிவிட்டார். அதற்கு அவரை கைது செய்து சிறை வைத்தார்கள். தற்போது ஜாமின் வழங்கப்பட்டு, பாஜக மாநில செயலாளர் SG சூர்யா வெளியில் வந்துவிட்டார் இருந்தாலும் திமுக ஆட்சியின் கீழ் நடக்கும் தவறுகளை மக்களுக்கு புரிய வைத்தே தீருவேன் என்ற நோக்கத்துடன் சமீபத்தில் கருத்து ஒன்றே பகிர்ந்து இருக்கிறார். இதற்கு எதிராக தான் இவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். "சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீட்சிதர்களை மிகவும் மோசமான முறையில் நடத்தியதாகவும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்து கோவில் நிர்வாகத்திடம் அத்து மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவு காரணமாக தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மன் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள்.