சிவன்மலை உத்தரவு பெட்டி... இந்த பொருளினால் விலைவாசி உயர்வா... பின்னணி என்ன?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தற்போது எண்ணெய் மற்றும் அரிசி வைக்கப்பட்டு பூஜிக்கப் படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருமலை ஆண்டவர் உத்தரவு பெட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக இங்குள்ள சிவன் மலையில் முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இங்கு சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி என்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. இங்கு வைத்து பூஜிக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், அது நல்லதாக அல்லது சமுதாயத்தின் எச்சரிக்கை ஒலியாக இருக்குமாம்.
இங்கு வைத்து பூஜிக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்பொழுது சிவன் கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நல்லெண்ணெய் மற்றும் அரிசி வைத்து பூஜிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைத்து பூஜைக்கப்படும் பொருட்களை இறைவன் தன்னுடைய பக்தர்களின் கனவில் வந்து தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. பிறகு அந்த பக்தர் கோயில் நிர்வாகத்தை முறையிட்டு பொருளை வைத்து வழிபடலாமா?வேண்டாமா? என்பது போன்றான செயல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன் பிறகு ஆண்டவர் அனுமதி அளித்ததன் பெயரில் அவர்கள் கூறிய பொருட்கள் இந்த ஒரு உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நல்லெண்ணெய் மற்றும் அரிசி விலைவாசி ஏற்றத்தை அல்லது இறக்கத்தை குறிக்குமா? என்பது தெரியவில்லை. ஒரு வேல வரும் காலங்களில் விலைவாசி அதிக அளவில்உயரும் என்பதை மறைமுகமாக இது குறிக்கலாம் அல்லது விலைவாசி சற்று குறையும் என்பது தற்போது தெரியாது பொறுத்திருந்து பார்க்கலாம்.
Input & Image courtesy: News