பயிற்சி மாணவிகள் மத மாற்றம் - வெளிநாட்டுக்கு கடத்தப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு.!
பயிற்சி மாணவிகள் மத மாற்றம் - வெளிநாட்டுக்கு கடத்தப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு.!;
விருத்தாசலத்தில் நர்சிங் கல்லூரி என்ற பெயரில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் ஆதரவற்ற பெண்களைக் குறி வைத்து மதமாற்றம், விபச்சாரம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடலூரைச் சேர்ந்த செந்தில் குமார்- பழனியம்மாள் தம்பதியின் மகள் கீர்த்திகா.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ படித்த இவர் விருப்பமில்லாமல் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டதால் விருத்தாசலத்தில் 'கிரேஸ் கம்யூனிட்டி காலேஜ்' என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனத்தில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே நர்சிங் உதவியாளராக பயிற்சி பெற்ற கீர்த்திகா பயிற்சி முடிந்த பின்னர் அங்கேயே வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
முதல் ஒரு வருடம் எல்லாம் நன்றாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதோடு "இயேசு தான் நம் கடவுள்" என்றெல்லாம் வினோதமாக பேச ஆரம்பித்திருக்கிறார். இது பற்றி கீர்த்திகாவின் பெற்றோர் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் ஆராம் அப்பாவு என்பவரிடம் சென்று விசாரித்து இருக்கிறார்கள்.
முன்னர் கல்வி நிறுவனத்திலேயே வேலை போட்டுத் தருவதாகக் கூறி கீர்த்திகாவை வேலைக்கு அனுப்ப அப்பாவு அவரது பெற்றோரை சம்மதிக்க வைத்திருக்கிறார். இப்போது "கீர்த்திகா கடவுளின் குழந்தை. அவளை கர்த்தர் ஆராதிப்பார். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறியதாக கூறப்படுகிறது.
எனினும் திருப்தி அடையாத கிருத்திகாவின் பெற்றோர் திருமணம் ஆனால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் உறவினர் ஆனந்தராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு ஆராம் அப்பாவு அவரது உதவியாளர் கோமதி என்ற பெண்ணுடன் வந்து ஆசீர்வதித்து பின்னர் வீட்டுக்கு அழைத்து இரண்டு நாட்கள் விருந்தெல்லாம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வேலைக்குப் போன கிருத்திகா வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்த நிலையில் பெண்ணைக் காணாத கவலையில் பெற்றோர் கல்வி நிறுவனத்தில் சென்று கேட்ட போது கிருத்திகா அங்கு வரவே இல்லை என்று சாதித்திருக்கின்றனர்.