தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 ஒரே கட்டமாக தேர்தல்!
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என்று மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

அதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று (ஜனவரி 26) மாலை 6.30 மணிக்கு தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், நகராட்சிகள் என அனைத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது. வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தரப்படும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi