சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து.!
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே காலமண்மாயி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, கார் நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் மின்கம்பத்தில் மோதி தலைகுப்பற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஆட்சியர் மதுசூதன்ரெட்டி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே காலமண்மாயி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, கார் நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது.
காரில் இருந்த ஆட்சியர் மதுசூதன்ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆட்சியர் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.