பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர்.!

sivaganga-dist-collector-fine

Update: 2021-03-17 07:37 GMT

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கூறுகையில், அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் ஒருசில மாவட்டங்களிலும் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் பொது இடங்களில் கூட்டம் அதிகமாக கூடுவதும், சமூக இடைவெளியை பின்பற்றாததும், முகக்கவசம் அணியாததுமே கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.


 



இதனால், முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 எச்சில் துப்பினால் ரூ.500 சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500ம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதலை மீறினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இது போன்ற நடவடிக்கைளை மற்ற மாவட்டங்களிலும் பின்பற்றினால் கண்டிப்பாக தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

Similar News