இந்து மதத்தை அவதூறாக பேசிவரும் திருமாவளவன் மீது சிவனடியார்கள் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

தொடர்ந்து இந்து மதத்தை அவதூறான முறையில் கருத்துக்களை கூறி வரும் திருமாவளவனை கண்டித்து திருப்பூரில் சிவனடியார்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2021-11-17 02:39 GMT

தொடர்ந்து இந்து மதத்தை அவதூறான முறையில் கருத்துக்களை கூறி வரும் திருமாவளவனை கண்டித்து திருப்பூரில் சிவனடியார்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விசிக தலைவர் திருமாவளவனும், தி.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சியில் இருப்பவர்களும் தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் தவறாக பேசுவதும், கடவுளை அவமதித்தும் வருகின்றனர். அதிலும் இந்துக்கள் பண்டிகை வருவதற்கு சில நாட்கள் முன்னர்தான் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை பேசி வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். 


அதே போன்று சில நாட்களுக்கு முன்னர் இந்து மத வழிபாடுகள் பற்றி விசிக தலைவர் திருமாவளவன் மிகவும் அவதூறான வகையில் கருத்துக்கை கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு இந்துக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் முன்பாக சிவனடியார் திருக்கூட்டத்தினர் கலந்து கொண்டு, திருவாசகம், சிவபுராண பாடல்களை பாடி திருமாவளவனுக்கு கண்டனங்களை தெரிவித்த பின்னர் திருப்பூர் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்தனர். இது பற்றி சிவனடியார்கள் கூறியதாவது: தொடர்ந்து திருமாவளவன் இந்து மத வழிபாட்டு முறைகள் பற்றியும், அருளாளர்கள் பற்றியும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பேசி வருகின்றனர். இது போன்று பேசுவதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்து மத வழிபாட்டில் தலையிடும் திருமாவளவனுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று திருமுறை பாராயணம் செய்து கண்டனங்களை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source, Image Courtesy: Dinamlar


Tags:    

Similar News