சிறு குறு தொழில்களை மேம்படுத்த களமிறங்கும் மத்திய அரசு - அசத்தல் திட்டம் என்ன?
சிறு,குறு தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு திட்டங்கள்.
உசிலம்பட்டியை சேர்ந்த நபர் டாக்டர் முத்துராமன் மத்திய அமைச்சகத்தின் சிறு குறு தொழில் மேம்பாட்டு கவுன்சிலர் கவுன்சிலிங் துணைத்தலைவராக பதவியேற்று உள்ளார். அவர் கூறும் பொழுது பிரதமர் மோடி சிறு,குறு தொழில் மேம்பாட்டு அமைச்சர் நாராயண ராணி சிறு குறு தொழில்களை மேம்படுத்தப்பட்டுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். சிறு தொழில் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் தொழில் தொடங்கப் பணிக்காட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மீனவர்கள், நெசவாளர்கள், தேன் வளர்ப்போர், சிறு விவசாயிகளுக்கு மானிய உதவி கடன் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தப் படுகின்றன. கட்டுமான தொழிலில் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த தொழிலில் நவீன தொழில்நுட்பங்களை குறித்த கண்காட்சியை தமிழகத்தில் மதுரை கோவை மற்றும் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் நடத்துவதற்கு வேண்டுகோளை விடுத்துள்ளோம்.
இதற்கு சிறு குறு தொழில் மேம்பாட்டு கவுன்சில் தேவையான உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் சிறுகுறு தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய திட்டங்களை கொண்டு வருகின்றது. இவற்றை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பில் மேம்பாட்டு கவுன்சில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Vikatan News