போலி பட்டா மாறுதல்... நியாயம் கேட்ட சமூக ஆர்வலர்... தாக்கிய தி.மு.க நிர்வாகி!

போலி பட்டா மாறுதலுக்கு ஆதரவாக செயல்பட்டதை எதிர்த்து நியாயம் கேட்ட சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க நிர்வாகி.

Update: 2023-04-23 05:26 GMT

போலி பட்டா மாறுதலுக்கு ஆதரவாக செயல் பட்டு, அதை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர்களை கோட்டாட்சியர் முன்னிலையில் அடிக்கப் பாய்ந்த தி.மு.க பிரமுகரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக தென்காசி மாவட்டம் ஆவுடையனூர் பகுதியில் VAO ஆக பணியாற்றி வருபவர் செந்தூர் பாண்டியன், இவர் அந்த பகுதிகளில் இருக்கும் லோக்கல் திமுக நிர்வாகிகளுக்கு ஆதரவாக போலியாக பட்டாக்களை மாறுதல் செய்து வந்து இருக்கிறார்.



இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்து சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து மாவட்ட வருவாய் ஆட்சியர் அலுவலகத்திடம் புகார் ஒன்றை அழுத்தி இருக்கிறார்கள். இந்த புகாரின் பெயரில மாவட்ட வருவாய் ஆணையர் கங்கா தேவி விசாரணை மேற்கொண்டு இருக்கிறார். அதில், தொடக்க வேளாண்மை வங்கியின் துணைத் தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுப்பிரமணியன் அந்த அதிகாரிக்கு ஆதரவாக பேசியதோடு மட்டுமல்லாமல் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்த சமூக ஆர்வலரை தாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


திருட்டுத்தனத்தை தொழிலாக செய்யும் திராவிட மாடல் என பதிவு செய்து பல்வேறு நபர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். தி.மு க நிர்வாகிகள் இப்படி அரசு அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Input & Image courtesy: Mediyaan News

Tags:    

Similar News