நல்ல நேரம் பார்த்து கையெழுத்து, ஈ.வே.ரா திடலில் மரியாதையை - கழகத்து அரசியலை கையில் எடுத்த உதயநிதி
பகுத்தறிவு பேசும் தி.மு.கவில் அமைச்சர் ஆன பிறகு நல்ல நேரம் பார்த்து கையெழுத்திடும் உதயநிதி.
சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி தற்பொழுது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக டிசம்பர் 14 இன்று சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரமான காலை 9.30 மணிக்கு அளவில் பதவி ஏற்று கொண்டார்.
இந்த நிலையில் இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தாலும், திரை உலகில் இருந்து தற்பொழுது அரசியல் பிரபலமாக தன்னை முன்னிறுத்தி வந்து இருக்கிறார். அவருக்குத் திரை உலகினரும் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை ஒரு பக்கம் தெரிவித்தாலும், சமூக வலைத்தளங்களில் இது பற்றி பல்வேறு பேச்சுக்கள் எழப்பட்டு இருக்கிறது. உதயநிதி அமைச்சராக பதவியேற்ற பின் முதல் கையெழுத்தாக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரத்தில் இருந்த 6000 ஆக உயர்த்தி அறிவிக்கும் கோப்பில் தற்பொழுது கையெழுத்து கிட்டு இருக்கிறார்.
இதுவே இவர் அமைச்சரான பிறகு போடும் முதல் கையெழுத்து, அப்பொழுது முதல் கையெழுத்து போடும் பொழுது உதயநிதி தன்னுடைய கைக்கடிகாரத்தில் நல்ல நேரத்தை பார்த்த பின்னணி கையெழுத்து போட்டார். எனவே இந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பகுத்தறிவு பேசும் தி.மு.கவில் அமைச்சராக பதவி ஏற்றதும் முதல் கோப்பில் கையெழுத்திடுவதற்கு மட்டும் நல்ல நேரம் பார்ப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar