'மன்னிப்பு கேட்க முடியாது போடா’ என்கிற வாசகம்... சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்...
மன்னிப்பு கேட்க முடியாது போடா என்கின்ற வசனம் அடங்கிய டி-ஷர்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்.
ஒருவருக்கு தன்னுடைய பதிலை தெரிவிக்கும் விதமாக டி-ஷர்ட்களில் அந்த வசனத்தை பொறித்து அதை அணிந்து கொள்வதன் மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுப்பது தற்போது சமீபத்தில் வைரல் ஆக்கி வருகிறது. அந்த வகையில் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக 'மன்னிப்பு கேட்க முடியாது போடா' என்ற வசனம் அடங்கிய டி-ஷர்ட் சமூக வலைத்தளங்களில் வைரலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் இந்த ஒரு பதிலை தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள்.
தங்களுடைய கருத்துக்களை இப்படி வசனங்கள் மூலமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் ட்ரெண்டாக்கினர். இந்த ஒரு நிலையில் சமீபத்தில் தி.மு.க முக்கிய புள்ளிகள் பற்றிய சொத்து பட்டியலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியிட்டு இருந்தார். இதற்கு தி.மு.க மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இழப்பீடு கேட்டு அண்ணாமலை அவர்களுக்கு வக்கீல் நோட்டு அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு அண்ணாமலை அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்து இருந்தார்.
மேலும் இது பற்றி தி.மு.க தரப்பில் கூறுகையில், அண்ணாமலை அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக சுமார் 500 கோடி தங்களுக்கு தர வேண்டும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் வக்கீல் மூலமாக அண்ணாமலை அவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், தி.மு.கவினர் சொத்து மதிப்பு குறித்து வெளியிடப்பட்ட செய்தி உண்மை. தி.மு.கவினர் சொத்து மதிப்பு ஆனது பொதுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், இழப்பீடும் வழங்க முடியாது. வழக்கைச் சட்டரீதியாக இதற்குள்ள தயார்" என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy: Mediyaan News